Wednesday, June 5, 2019

நேரம் தேவைப்படுகிறது - கவிதை


நேரம் தேவைப்படுகிறது 

எல்ல்லாவற்றிற்கும் நேரம் தேவைப்படுகிறது
சில வலிகள்
சில ஏமாற்றங்கள்
சில துரோகங்கள்
இவை கடுகளவேனினும்
அதற்குப்  பழகிக்கொள்ள
என்னைத்  தயார்ப் படுத்திக்கொள்ள
என்னை வலிமைப்படுத்திக்கொள்ள

ஒரே ஒரு முன்னறிவிப்பேனும் கிடைத்தால்
தயாராகிவிடுவேன்
வலிகளை வளைத்துக்கொள்ள
ஏமாற்றங்களை அணைத்துக்கொள்ள
துரோகங்களை தோள்சேர்த்துக்கொள்ள

ஆம் .. எதற்கும்
நேரம் தேவைப்படுகிறது !



Tuesday, January 29, 2019

இன்னும் தலைப்பிடவில்லை...

அந்த வேலை  செய்யும் பெண்களின் விடுதி நுங்கம்பாகத்தின் கடைக்கோடி பகுதியில் உள்ளது. நல்ல வசதியான மற்றும் நடுத்தர வர்க்க வெளியூர் பெண்களுக்கு முன்னுரிமை . எதோ ஒரு இ .கு.க கட்சியின்  முன்னாள் ஒன்றியமோ, மாவட்டமோ நடத்துவதாக கேள்வி. விடுதியில் பகல் நேரங்களில் அவ்வளவாக ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடக்கும் . விடுதியை ரமணி அம்மாள் என்கிற 55 வயது மதிக்கத்தக்க முன்னாள் கல்லூரி  பேராசிரியர் பொறுப்பில் ஒன்றியம் விட்டுவிட்டார். ரமணி அம்மாளுக்கு இது ஒரு பகுதி நேர வேலை போலத்தான் .இங்கு மூன்று சின்ன சின்ன கட்டடங்கள் . இரண்டு தாங்கும் விடுதி மூன்றாவது உணவு வழங்கும் கட்டிடம். ரமணி அம்மாளின் கீழ் இரு மேற்பார்வையாளர்கள் அன்னம்மாள் மற்றும் தங்கம். இருவருக்கும் பக்கத்திலேயே வீடு என்பதால் இந்த நேரம் வந்து போவார்கள் என்று கணக்கு கிடையாது. முன்னர் போல விடுதியில் யாரும் உணவு எடுத்துக்கொள்வதில்லை என்பதால் கண்காணிப்பு பணி மட்டும். ரமணி அம்மாள் எப்போதெல்லாம் இங்கே வருவார் என்று தெரிந்து கொண்டு அந்நேரம்  மற்றும் இவர்கள் இருவரும் ஆஜர் .
இவர்கள் போக விடுதியின் காவலாளி சச்சிதானந்தம் . மாலை 6 மணியில் இருந்து மறு நாள் காலை 6 மணி வரை வேலை. இவருக்கு என்று மோட்டார் அறையின் பக்கம் கழிவறை வசதியுடன் கூடிய  ஒரு தனி அறை .
சச்சின்(சச்சிதானந்தம்) வயது ஒரு ஐம்பதுக்கு மேல் இருக்கும். அவருக்கு 4 மகன்கள் . இவருடைய வரும்படி தான் வீட்டில் பெரும்பகுதி ஓடி அடையும் .
மூத்த மகன் கல்லூரி படிப்பு பாதியில் நிறுத்தி ஒரு முறை சிறை வாசம் சென்று வந்தவன். கட்சி ஆட்களின் சிபாரிசின் பேரில் எப்படியோ இங்கே அவருக்கு வேலை கிடைத்தது. சச்சினுக்கு இரவில் கொஞ்சமேனும் மது இருந்தால்தான் வேலை ஓடும் .
விடுதியின் இரண்டாவது கட்டிடத்தின் இரண்டு மற்றும் மூன்றாவது தளம் குளிரூட்டப்பட்ட  A/C வசதி கொண்ட பகுதி . அதில் ஆனந்தி மற்றும் ஒரே அறையில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இருவரும் நல்ல வருவாய் மற்றும் சொத்து பின்புலம் சார்ந்தவர்கள் . அதில் ரம்மியா கொஞ்சம் அடக்கம் மற்றும் பொறுப்புணர்வுள்ள பெண் . ஆனந்தி சற்று மாடர்ன் உலகத்தில்  ரொம்பவே மாடர்ன் . இருவருக்கும் வயது ஒரு 24 இருக்கும். நல்ல மென்பொருள் அலுவலகத்தில் பணி . காய் நிறைய சம்பளம். வீட்டிற்கு ஒரு ருபாய் அனுப்ப அவசியம் இல்லை . சம்பளம் போக வீட்டில் இருந்து மாதாமாதம் குறிப்பிட்ட தொகை வந்துவிடும் .

Tuesday, April 11, 2017

ESRI SDE Oracle DB - System tables

Oracle SDE tables and SQL queries to find Versions / Session conflicts and GDBM sessions

 Top n versions

select * from (
SELECT v.owner||'.'||v.name "VERSION NAME", COUNT(sl.lineage_id) "LINEAGE LENGTH"
FROM sde.states s, sde.state_lineages sl, sde.versions v
WHERE s.lineage_name = sl.lineage_name
AND sl.lineage_id <= s.state_id
AND v.state_id = s.state_id
GROUP BY v.owner, v.name, sl.lineage_name
ORDER BY "LINEAGE LENGTH") where rownum <= 20;