நேரம் தேவைப்படுகிறது
எல்ல்லாவற்றிற்கும் நேரம் தேவைப்படுகிறது
சில வலிகள்
சில ஏமாற்றங்கள்
சில துரோகங்கள்
இவை கடுகளவேனினும்
அதற்குப் பழகிக்கொள்ள
என்னைத் தயார்ப் படுத்திக்கொள்ள
என்னை வலிமைப்படுத்திக்கொள்ள
ஒரே ஒரு முன்னறிவிப்பேனும் கிடைத்தால்
தயாராகிவிடுவேன்
வலிகளை வளைத்துக்கொள்ள
ஏமாற்றங்களை அணைத்துக்கொள்ள
துரோகங்களை தோள்சேர்த்துக்கொள்ள
ஆம் .. எதற்கும்
நேரம் தேவைப்படுகிறது !
No comments:
Post a Comment